கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையே   பேசுபொருளாக அண்மைக்காலமாக  பேசுபொருளாக இருந்த கச்சதீவு மீட்பு விவகாரம்  ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (19.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்தியாவில் தேர்தல் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரசியல் தரப்பினரினால் கரமேந்தப்பட்ட ஆயுதமாகவே கச்சதீவு விவகாரம் அமைந்திருந்தது.

இதேநேரம் இந்தியாவில் மட்டுமல்ல அநேக நாடுகளில் இவ்வாறான விடயங்கள் தேர்தல் காலங்களில் பொதுவானதொன்று தான் இவ்வாறான கோஷங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கும் அதனை மாற்ற முடியாது.

இந்நிலையில் தற்போது இந்திய சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள்  குறிப்பாக தமிழகத்தில் ஆரம்பித்துள்ளன. அந்தவகையைில் இந்தியாவில் தேர்தல் மேடைகளில் பெரும் பேசுபொருளாக திரிபுபடுத்தப்பட்டிருந்த கச்சதீவு விவகாரம் இனி பேசுபொருளாக இருக்கப்போவதில்லை.

இதேநேரம் இலங்கயின் வளம் மிக்க அதிகமான இடங்களை இழந்து பெறப்பட  கச்சதீவு  என்ற சிறிய தீவானது  கடந்த 1974 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் இந்தியா அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கே வழங்கிவைக்கப்பட்டது, இதனால் எந்த விவாதமும் அவசியமற்றது.

இதேநேரம் இலங்கைக்கே உரித்தான கச்சதீவை இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கியமை தனது நாட்டுப் பாதுகாப்பு கடல் எல்லையை வரையறுக்கும் சொயற்பாடாக பார்க்க முடியும்

அது மட்டுமல்லாது கச்சதீவை இலங்கை பொற்றதன் மூலம் கச்சதீவைப் போன்ற என்பது வீதமான கடற்பரப்பை எமது மீனவர்கள் இழந்து விட்டனர்.

இவ்வாறு நிலையில் இந்திய தேர்தலில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு தேர்தல் காலத்து பிரச்சாரமாகவே இதை நாம் பார்க்குறோம்.

ஆகவே கச்சதீவு எமது சொத்து. சில வேளை  இந்தியாவின் மத்தியில்  ஆட்சி அமைக்கும் அரசாங்கம் மீண்டும் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுக்குமானால் அதை இராஜதந்திர நீதியில் பேசி முடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: