இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி – விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 15th, 2022

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 47 காட்டு யானைகளும் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் மரணித்துள்ளன. கடந்த 3 வருடங்களில் யானை- மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்த அதேவேளை 122 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், யானை-மனித மோதலால் 112 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வருடத்தில் யானை மனித மோதலால் 142 பேர் உயிரிழந்ததாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

அபாய மட்டத்தை எட்டியது இரணைமடு குளம் - அனைத்து வான் கதவுகளும் திறக்கப்படுள்ளதாக தாழ்நில பகுதி மக்களி...
செயலூக்கி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மக்களிடம் மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது!

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிக...
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை...
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 3...