காலாவதியான தண்ணீர்ப் போத்தல் விநியோகித்த தென்பகுதி நிறுவனத்துக்கு நீதிமன்று தண்டம்!

Thursday, June 21st, 2018

பதிவுத் திகதி காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனை செய்த நிறுவனத்துக்கு 22 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்தது நீதிமன்று.

அதுமட்டுமன்றித் தரமற்ற நல்லெண்ணெய் உற்பத்தி செய்தார் என்று உற்பத்தியாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது. முல்லைத்தீவின் தண்ணீரூற்று முள்ளியவளை வர்த்தக நிலையங்கள் சிலவற்றை காலாவதியான உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு எதிராகவும் காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவும் தரமற்ற நல்லெண்ணெயை உற்பத்தி செய்து இந்தப் பிரதேசத்தில் விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர் ஒருவருக்கு எதிராகவும் தண்ணீரூற்று பொது சுகாதாரப் பரிசோதகரால் வழங்குகள் தொடுக்கப்பட்டன.

அவை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. காலாவதியான உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் 2 வர்த்தகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் நீதிமன்று தண்டம் விதித்தது.

காலாவதியான தண்ணீர்ப் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு 22 ஆயிரத்து 500 ரூபாவும் தண்டம் விதித்ததுடன் தரமற்ற நல்லெண்ணையை உற்பத்தி செய்து விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் வழக்குக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் அவருக்குப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

Related posts: