இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கை – ஜனாதிபதி பெருமிதம்!

Monday, May 15th, 2023

 “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஆரம்ப முயற்சியாக உலகில் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை இளைஞர்களே கோரினர். ஆகையால் இந்த சந்தர்பத்தை கொண்டு உரிய வகையில் பயனடைவர் என தான் நம்பவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் நாம் அபிவிருத்து அடைந்துவரும் நாடாகவே இருக்க முடியாது. எவ்வாறு நாம் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவது என்பதை சிந்திக்க வேண்டும். எமக்கு நல்லதொரு எதிர்காலம் தேவைப்படுகிறது. அதற்காக நல்லதொரு பொருளாதாரமும் அவசியமரகியது. சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அது பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள் எனவும் ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: