இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
Wednesday, November 18th, 2020
நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்காக 30 வருடங்களுக்குள் திரும்பி செலுத்தக் கூடிய வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய வீடமைப்பு கடனை வழங்குவதற்காக வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுத்து சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள முக்கிய தகவல்!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!
காலநிலை மாற்றம் குறித்து தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|
|


