இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் – யாழில் சம்பவம்!
Saturday, July 20th, 2019
யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் மீதே பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, வீதியால் வந்த போக்குவரத்து பொலிஸார் மூவர் இளைஞனை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இளைஞன் சென்றுள்ளார்.
எனினும் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கேபிள் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணம் கொடுத்த மக்கள் அவலத்தில்!
நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!
டிசம்பர்முதல் வாசனை பொருள் ஏற்றுமதி - மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழ...
|
|
|


