குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!
Monday, April 29th, 2019
பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ கொத்தலாவல பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஈராக் நாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 6 நைஜீரியா பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகட புத்கமுவ வீதியிலும் 4 நைஜீரியாவை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரத்மலானையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 20 வயதாக இந்திய பிரஜையொவருவர் கைது செய்யப்பட்டுளளார்.
தெஹிவளையில் தாய்லாந்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
வெடி பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும்!
நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!
கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள், முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களு...
|
|
|


