இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை!

தகுதி உள்ள இளம் வாக்காளர்கள் தற்போது தேர்தல்களில் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
கொழும்பு பிரதேசத்தில் கடந்த வருட பதிவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 18 ஆயிரம் வாக்காளர்கள் மீள பதிவு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொழும்பு, தெஹிவலை-கல்கிசை, மொரட்டுவ, கொலன்னாவ, மஹரகம மற்றும் கடுவல பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், அரசியல்வாதிகள் அசமத்தனமான போக்கை கடைப்பிடிப்பதனாலேயே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\இது தவிர, நவீன மாடி வீட்டு தொகுதிகளில் வசிக்கு வாக்காளர்கள் தமது வீட்டில் வசிப்பவர்கள் குறித்த விபரங்களை வாக்காளர் பதிவேட்டில் பதிய முன்வருவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
|
|