வடக்கில் வறட்சியால் 85,000 பேர் பாதிப்பு – 14 மாவட்டங்களில் உச்ச வெப்பம்!

Friday, April 12th, 2019

14 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு மாகாணத்தில் மட்டும் 24,207 குடும்பங்களைச் சேர்ந்த 84,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவாமாகாணம் தவிர்ந்த 8 மாகாணங்களைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் வறட்சி நிலை தொடர்வதாகவும், இதனால் 99,226 குடும்பங்களைச் சேர்ந்த 4,07,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்தது.

அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, குருநாகல், புத்தளம், கேகாலை, மாத்தளை, கண்டி, கம்பஹா, ஆகிய மாவட்ட்களில் 59 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேல்மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியன அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் மேல்மாகாணத்டதின் கம்பஹா, மற்றும் பிற மாவட்டங்களில் 46 ஆயிரத்த 50,084 குடும்பங்களைச் சேர்ந்த 2,21,659 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும்,

வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் மன் னார் ஆகிய மாவட்டங்களில் 24,207 குடும்பங்களைச் சேர்ந்த 84,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: