இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள்!
Sunday, April 1st, 2018
‘சுவசரிய’ என்ற இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இது இலவச சேவையாக முன்னெடுக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையின் பிரகாரம் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நன்மையடைந்துள்ளனர்.
இந்த சேவைகள், தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறுகின்றன. மாவட்ட பொது மக்கள் ‘1990’ என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்
Related posts:
யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்!
தரமற்ற கல்வி முறை - ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் - பரீட்சைகள் ஆ...
|
|
|


