இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமென ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஹொங்கொங், மலேஷியா மற்றும் பூட்டான் ஆகிய ஆசிய நாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கு முன்னெடுத்துள்ள நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன், ஊழல் ஒழிப்பு பிரிவினரின் அதிகாரிகளையும் இணைத்து ஊழலை கண்டறியும் விசேட பிரிவை ஸ்தாப்பிப்பற்கு தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை - இராணுவ தளபதி !
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முயற்சி - நாடாளுமன்ற உற...
காணி உரித்துகள் பெண்களின் பெயர்களிலும் வழங்கப்படும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
|
|