இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமனம்!
Thursday, December 28th, 2023
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சேத்திய குணசேகர மற்றும் கே.பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது: யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!
புத்தாண்டை முன்னிட்டு வடக்கிற்கு விசேட ரயில் சேவை!
கொழும்பு - வவுனியா வரையான புகையிரதம் யாழ்ப்பாணம் வரை சேவையில்!
|
|
|


