இலஞ்சம் பெற்ற அதிபர்களை  இடைநிறுத்த நடவடிக்கை !

Monday, February 6th, 2017

முதலாம் தரத்தில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர்களை சேவையிலிருந்து இடைநிறுத்த

நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச குறிப்பிட்டார்.

அதிபர்கள் சிலர் இலஞ்சம் பெற்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் நிறைவு பெற்றதும் சம்பந்தப்பட்ட அதிபர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக அவர் கூறினார்

பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும்போது, வசதிகள் மற்றும் சேவைக்கட்டணம் தவிர்ந்த வேறு பணம் அல்லது நன்மைகளை அதிபர்கள் பெறுவார்களாயின், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாகாண கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இடம்பெறுமாயின், கல்வியமைச்சர் அல்லது கல்வியமைச்சின் செயலாளர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யமுடியும் என்றும் மேல் மாகாண கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

bribery-415x260

Related posts:


எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புகையிலை வரி நிச்சயம் அமுலாகும்!- அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
முச்சக்கரவண்டி கவிழ்ந்து கோர விபத்து – யாழ்ப்பாணத்தில் 11 முன்பள்ளிச் சிறுவர்கள் வைத்தியசாலையில் அனு...