இலங்கைக்கு 141 வது இடம்!
Thursday, May 4th, 2017
ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன், 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினம் நேற்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் ஶ்ரீலங்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்றம் அனுமதி - இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரைவில் அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்துவேன் - ...
|
|
|


