இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள்!
Monday, January 15th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷ்சியன் லூங்க் (lee hsien loong) மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ (Joko Widodo) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் இந்தோனேசியா ஜனாதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
இதன்போது அவர்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து உடன்படிக்கைகளும்கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் பலர் சமுர்த்திப் பயனாளிகளாக இணைவதற்கு வாய்ப்பு!
நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம் – நாமல் எம்பி தெரிவிப்பு!
இலங்கையில் அறிமுகமானது ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல்...
|
|
|


