இலங்கை வருகிறார் அமெரிக்க துணை உதவி செயலாளர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்போது இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் என தெரிய வருகின்றது.
இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் அவர் பாகிஸ்தானுக்கான விஜயமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.
Related posts:
காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக்கும் சட்டவரைவை கை விடுங்கள் - தேசிய அமைப்புக்கான ஒன்றியம்!
அஸ்வெசும 2 ஆம் கட்ட விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழப்பு - உறுதிப்பறுத்தியது அந்நாட்டு அரச ஊடகமான ...
|
|
கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி சில வாரங்களில் பூர்த்தி - உள்நாட்டலுவல்கள் அமைச்சு!
77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தக...
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோ...