இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!

Monday, September 21st, 2020

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய பொலிஸ் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சி, குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1997 இல் பொலிஸ் இன்ஸ்பெக்டராக சேவையில் சேர்ந்த ஜசிங்கரச்சி, பின்னர் 2017 பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்.

ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை உப பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பது இதுவே இலங்கையில் முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: