இலங்கை வந்த மர்ம விமானம் : தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தல்!
Friday, July 26th, 2019
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைதந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படாத நிலையில்
அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
பாதுக்க பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளதுடன் அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது
எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியாத நிலையில் அதில் வந்தவர்கள் யார் இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார்.
Related posts:
|
|
|


