இலங்கை வந்தது இந்தியக் கப்பல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இளைஞர்கள் குழுக்களும் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளனர்.
இதேவேளை, இந்த இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியக் கப்பல் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் கொழும்புதுறை முகத்திற்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ தெரிவித்துள்ளார். இது தவிர, மேலதிகமாக இன்னொரு நிவாரணக் கப்பலும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்!
இவ்வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு !
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர விக்ரமநா...
|
|