இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா தீர்மானம்!

Monday, June 10th, 2019

எல்லை மீறி மீன்பிடியிலீடுபட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 32 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில், குறித்த 32 இலங்கை மீனவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், விடுவிக்கப்படும் இலங்கை மீனவர்கள் சில தினங்களில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: