இலங்கை – மியன்மார் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பு – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024

இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பதில் மியன்மார் தூதுவருடனான சந்திப்பின் போது, பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் மியன்மாருக்கிடையேயான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு மியன்மார் யென்குன் நகரில் இடம்பெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ளவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: