இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றம்!
 Saturday, March 24th, 2018
        
                    Saturday, March 24th, 2018
            பாகிஸ்தானின் குடியரசு தினத்ததை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கும் பாகிஸ்தானின் பிரதமருக்கும் இடையில் உத்தியோக பூர்வ சந்திப்பு பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயகவும் பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளரும் இடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய பாடசாலைக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இதில் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியின் பீடாதிபதியும் கைச்சாத்திட்டமை குறிப்படத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானின் மாநில கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் கைச்சாத்திட்டதாக தெரிழய வந்துள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        