இலங்கை மத்திய வங்கியின் 69வது ஆண்டறிக்கை வெளியானது!
Monday, April 29th, 2019
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை, வங்கியின் 69 வது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1949ஆம் ஆண்டு பணமுறைமை சட்டத்திற்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டறிக்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சுருக்கமான திரட்டாக வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரதி, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியினால், உத்தியோகபூர்வமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் 100 பேருக்கு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி!
மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் - அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...
|
|
|


