சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, May 5th, 2024

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்ப...
இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை - உகன்டா நிறுவனம்...
சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம் - பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!