இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடமைகளை பொறுப்பேற்பு!
Wednesday, September 15th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவி;டமிருந்த துனுத நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், சுமார் 9 ஆண்டு காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்பதாக இன்று 15 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைவாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதேநேரம், மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்திருந்த பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன், நேற்றையதினம் குறித்த பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


