இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Wednesday, June 26th, 2024
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
எரிபொருளின் தரம், திறன், மற்றும் செலவைக் குறைப்பதற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்கவும், அதிகரிக்கவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகரதெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் சம்பளக் கட்டமைப்பும் திருத்தியமைக்கப்படுவதுடன், பல செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
00
Related posts:
|
|
|


