இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறிப்பாக கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டதாகவும்,
இது கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் எரிபொருள் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பணியின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கு எம்.பிக்கள் எண்ணிக்கை மாற்றமில்லை!
வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் - அமைச்ச...
உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 6 ஆம் திகதி நடத்துவதற்...
|
|