இலங்கை – பங்ளாதேஷ் இணைந்து தைக்கப்பட்ட ஆடை தொழிற்துறையை முன்னெடுக்க  முயற்சி!

Tuesday, February 13th, 2018

தைக்கப்பட்ட ஆடை தொழிற்துறையை முன்னெடுக்க இலங்கை பங்களாதேஷ் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் தைக்கப்பட்ட ஆடை மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தினை கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய தைக்கப்பட்ட ஆடைத்தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக புத்தி ஜீவிகள்வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது இலங்கை தைக்கப்பட்ட ஆடை தொழில் மூலம் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுகின்றது.  இதேவேளை ஆடை உற்பத்தி மூலம் பங்களாதேஷ்28.14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெறுகின்றது.

சர்வதேச ரீதியாக தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் சீனாவிற்கு பின்னர் பங்களாதேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சீன ஆடை உற்பத்தி தொழிலில் 44 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை புதிய தொழில் நுட்பத்தை பிரயோகிப்பதன் மூலம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பரஸ்பரம் நிபுணத்துவ செயல்பாடுகளை பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் இதன் மூலம் இரு நாடுகளும் அந்நிய செலவணியை அதிக அளவில் பெறும் வாய்ப்பு உண்டு எனவும் பங்களாதேஷ் தைக்கப்பட்ட ஆடைஉற்பத்தியாளர் சங்கத்தின் சிரேஷ்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப...
33 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவி - ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க தீர்மானம...
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...