இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!
Tuesday, June 18th, 2024
இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அத்துடன் அரசியலமைப்புக்கு முரணான சரத்துகளை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அந்த சரத்துக்களை சீராக்கி சாதாரணப் பெரும்பான்மையில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 31ஆவது இடம்!
சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் - அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன!
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
|
|
|


