இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும் – இந்திய அரசியடம் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!

Sunday, October 17th, 2021

இலங்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்  திருப்பி செலுத்த வேண்டிய அனைத்து கடன்களின் சலுகைக் காலத்தை  நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய  வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் பா.ஜ. கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 12 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் தனது ட்ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வெளிவிவகார கொள்கையை மறுசீரமைப்புக்கான காலம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் செயலாளர் இலங்கைக்கு வருகை தந்து, இந்திய – இலங்கை தொடர்பை பாதிப்படைய செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளரின் இலங்கை விஜயத்தின் பின்னர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: