இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை!

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று சதவீத அதிகரிப்பாகும்.
இலங்கைக்கு வந்துள்ள சீன வர்த்தகத் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பிலான புள்ளிவிபரங்களை அவர் அறிவித்துள்ளார்.
சீனாவின் யுனான் மாநிலத்தில் அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை கண்காட்சி ஒன்றும் மாநாடு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் சிறியமற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சீன சந்தையில் ஸ்திரமான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|