இலங்கை – சீனா இடையேயான உறவை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது சீனா! – சீன அதிபர் ஷி ஜின்பிங்!

இலங்கையுடனான அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும், மக்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கும், விருப்பம் கொண்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு பாதை ஒரு அணைத் திட்டத்தின் உருவாக்கத்தில், இலங்கை பங்களிப்பதற்கும் தாம் மதிப்பளிப்பதாகவும் சீன அதிபர் தெரிவி த்துள்ளார்.
மாறிக் கொண்டிருக்கும் அனைத்துலக சூழல்களினால் சோதனைக்குள்ளான தருணங்களிலும், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து ஆரோக்கியமான, சுமுகமான இருதரப்பு உறவுகள் நீடித்து வந்திருக்கின்றன” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|