இலங்கை, சீனாவுக்கிடையிலான உடன்படிக்கை ஜனவரியில்!
Thursday, December 22nd, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதற்கட்ட உடன்படிக்கையை செய்துகொள்கின்றது.
சீனாவின் 1.15 மில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கைக்கு 20 வீத பங்கும் சீனாவுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்படையில் 99 ஆண்டுகால குத்தகைக்கு இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை சர்வதேச தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்ற இந்தியாக, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:
நாளை வடக்கை முடக்கும் மின்சாரம்!
இலங்கை - மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - கடன் மறுச...
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி கோனாவில் மகா வித்தியால மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து ...
|
|
|


