இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த அனுமதி – மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, June 11th, 2023
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்த நாட்டில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது - பாதுகாப்பு செயலாளர்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா விமரிசை!
தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப...
|
|
|


