இலங்கை சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

அரசாங்கம் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறது. இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்தில் இரண்டு தரப்பும் இணக்கத்துடன் இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
|
|