இலங்கை கிரிக்கட்டின் தலைவரானார் சம்மி சில்வா!
Thursday, February 21st, 2019
2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இன்று(21) இடம்பெற்றது.
இந்தத் தேர்தலில் ஷம்மி சில்வா, 83 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சம்மி சில்வா 27 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
முல்லையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் 21,702 பேர்!
எதிர்வரும் வெள்ளியன்று வாக்கெடுப்பிற்கு வருகின்றது 22 ஆவது திருத்தம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்...
அந்தமான் - நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!
|
|
|


