இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயமாகாது – அமைச்சர் கபிர் ஹாசிம்!

Monday, October 17th, 2016

ஒருபோதும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்படாது என அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேலும் கூறுகையில்;

இலாபமீட்டும் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினை தனியார் மயப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கமே திட்டமிட்டிருந்தது. 2011ம் ஆண்டில் ஆயுள் காப்புறுதி மற்றும் ஏனைய காப்புறுதிகள் தனித் தனியாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அநேக அரச நிறுவனங்கள் வெறும் பெயர்ப் பலகைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. அரசாங்க நிறுவனங்களை இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களாக உருவாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் இன்றும் மூன்று ஆண்டுகளில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தானத்தின் வருமானம் மூன்று மடங்காக உயர்வடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1-49

Related posts: