இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சி !

Thursday, July 22nd, 2021

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்ததுள்ளனர்.

சர்வதேச நன்கொடை நிறுவனங்களுடன் இணைந்து மேம்பட்ட பயிற்சி திறன்களைப் பெறுவதற்கான ஒரு பிரதான திட்டமாக விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடநெறி கருதப்படுவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெறிவிக்கின்றன.

இந்த பாடநெறியில் பங்கேற்பாளர்கள் பரந்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் கடலோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச நன்கொடை நிறுவனங்களின் அதிதிகள், இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியதாக கடலோர பாதுகாப்பு படை தெறிவித்துள்ளது.

Related posts: