இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !
Sunday, March 17th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கைதான 21 மீனவர்களும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!
இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!
புதிய வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வாய்ப்பு!
|
|
|


