இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் விமானங்களை இடைநிறுத்தியது குவைத்!
Tuesday, May 11th, 2021
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களை இடைநிறுத்துவதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் விமானங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவிலிருந்து குவைத்துக்கு முன்னெடுக்கப்படும் விமான சேவைகளை குவைத் இடை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!
அமைச்சர் டக்ளஸ் அறிவுரை : முல்லைத்தீவு சாலை ஊழியர் இருவர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!
|
|
|


