இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!
Wednesday, August 23rd, 2023
சீனவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் டொலர் மதிப்பிலான 11 இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்கு ஈடுபடுத்துவதற்காக கையளித்துள்ளது.
பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் அவசர கட்டளை மற்றும் தொடர்பாடல் அமைப்பு இந்த வாகனங்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.
அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஜயதாஸ பதவி இருந்தால் மேலும் சில அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை!
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் – மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் பைஸர்!
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை - தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் டிசம்பர்...
|
|
|


