இலங்கையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு!

Sunday, June 5th, 2016

யானைக்கால் நோயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

LF என அழைக்கப்படும் யானைக்கால் நோயானது, அதனால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக முடக்கி வைத்திருக்கும்.

அத்துடன், குறித்த நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த களங்கத்துடனே வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர்.

இதன் காரணமாக சமூகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதுடன் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்படும் நிலைமையும் ஏற்படும்.

தற்போது தென்கிழக்கு ஆசியா நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இந்த நோயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

அத்துடன், இதனால் ஏற்படும் பல்வேறு காரணிகளையும் முறியடித்துள்ள பெருமையை குறித்த இரு நாடுகளுக்கு சேரும் என உலக சுகாதார அமைப்பான WHO பாராட்டியுள்ளது.

இந்த நோயை ஒழிக்க அரும்பாடு பட்டதுடன் இலங்கையில் மேலும் வராமல் தடுக்கவும் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளமையானது, பாராட்டுதலுக்குரியது என உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: