இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவிப்பு!
Friday, August 14th, 2020
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு குரேஷி, தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த ருவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவை வாழ்த்துவதாகவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் டுவிட் செய்துள்ளார்.
Related posts:
மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - பொதுமக்கள...
தேசிய பாடசாலைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்கள் - 2 வாரங்களில் நிரப்ப ஏற்பாடு - மாகாண பாடசாலைகளின் ...
|
|
|


