இலங்கையில் 26 வீதமாக அதிகரித்துள்ளது வறுமை விகிதம் – ஜனாதிபதி ரணில் அதிர்ச்சித் தகவல்!

Monday, June 3rd, 2024

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாக  இருந்த வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10 சதவீதமாக ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் ...
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது – சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை...
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீன உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்க...