இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!
Sunday, April 18th, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு தொற்று நோய் தடுப்பு பிரிவில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில் அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் நாட்டில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிப்பு!
சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. - பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ' நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிர...
வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் - சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன- வெளியானத...
|
|
|


