இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரிப்பு!

நாட்டில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கடலுணவின் பெறுமதி நான்காயிரத்து 200 கோடி ரூபாவை தாண்டுவதாக அமைச்சர் கூறினார்.
2017ஆம் ஆண்டில் மொத்தமாக 33 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெறுமதி 390 கோடி ரூபாவாகும்.
இதேவேளை மீன் இறக்குமதியை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முக்கியஸ்தர்களின் வாகனங்களையும் சோதனையிடலாம் - ஜனாதிபதி பணிப்பு!
தாமதம் என கூறுவது தவறானது - மனித உரிமைகள் ஆணையம்!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய ...
|
|