இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
Monday, July 23rd, 2018
உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுனர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சவூதி அரேபியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டொலர் விலையை நெருங்கியுள்ளது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரென்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73.11 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில்!
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் - மத்திய வங்கி ஆளுனர்!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...
|
|
|


