இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி – பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
Tuesday, August 1st, 2023
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, QR குறியீடு அறிமுகப்படுத்தியதன் பயனாக, ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலரை பயன்படுத்த முடிந்தது.
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலித்தீன்களுக்குத் தடை!
காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...
|
|
|


