இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை – ஜனாதிபதி!
Thursday, March 21st, 2019
போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகளை கொள்வனவு செய்ய தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினருக்கு தாக்குதல் படகுகளையோ, விமானப்படையினருக்கு போர் விமானங்களையோ கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நிலைமை நீடித்தது எனவும் இதனால் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் தரத்தை ஆராய்வதற்கு அமைச்சரவை இணைக்குழு உருவாக்கப்படும் எனவும் அதன் பின்னர் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
130 கோடி ரூபாவில் நாடெங்கும் 1,223 பாடசாலைகளுக்கு உதவி - கல்வி அமைச்சு வழங்கும்!
பிரதமர் இன்று சிங்கப்பூர் பயணம்!
மக்களின் மனமாற்றமே வடமராட்சியின் எதிர்காலத்தை வளமாக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஐய...
|
|
|


