இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!
Tuesday, November 23rd, 2021
நாட்டில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், கடந்த வருடத்தில் இத்தொகை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 61 ஆகக் குறைவடைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படும் - பிரதிப் பொலிஸ்மா அ...
மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் - கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொ...
மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உ...
|
|
|


